தனது எம்பி. பதவியை ராஜினாமா செய்த மாயாவதிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக்கொடுப்பதாக லாலுபிரசாத் யாதவ் கூறியதை அடுத்து, இருவரும் அரசியல் நாடகம் நடத்துவதாக பிஹார் பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து  பேசிய பிஹார் பாஜக தலைவர் நித்யானந்த ராய், ''இது முழுக்கமுழுக்க அரசியல் நாடகம். மாயாவதியின் எம்.பி. பதவிக்கான ஆயுட்காலம் இன்னும் 8 மாதங்கள் மட்டுமே. அவரின் உத்தரப்பிரதேச எம்எல்ஏக்களால் அவரை ஏப்ரல் மாதத்தில் மேலவைக்கு அனுப்பமுடியாது. இதனாலேயே தலித்துகளுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகமாடி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் மாயாவதி. அவருக்கு தலித்துகள் மீது எந்தக் கரிசனமும் இல்லை. அதை உ.பி. தேர்தலில் மக்களே நிரூபித்துவிட்டனர்.

அம்பேத்கரின் பெயரைவைத்து அரசியல் செய்தவர்களுக்கு ராம்நாத்தின் வெற்றி பதில் அளித்துவிட்டது.லாலு பிரசாத் மாயாவதிக்கு எம்.பி. பதவியை அளிப்பதாக கூறியுள்ளார். அவர் அரசியலில் தனதுகட்டுப்பாட்டை இழந்துவிட்டார். சர்ச்சைமிகுந்த விவகாரங்களில் நுழைந்து கவனத்தைத் தேடிக்கொள்ளலாம; அதன்மூலம் தன்னைக் காத்துக்கொள்ளலாம் என லாலுநினைக்கிறார்'' என்றார்.

Leave a Reply