சென்னையில் இருந்து வங்க தேசத்திற்கு கடல்வழியாக கப்பல்களில் சரக்குவாகனங்கள் ஏற்றுமதி செய்யும் திட்டத்தினை மத்திய  அமைச்சர் நிதின்கட்கரி துவக்கி வைத்தார்.இந்தியா-வங்கதேசம் இடையே கடல் மார்க்கமாக கப்பல் போக்கு  வரத்து செய்ய 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில்  இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழு த்தானது. இந்த ஒப்பந்தப்படி இந்தியாவில் உள்ள துறை முகங்களில் இருந்து வங்க தேசத்தில் உள்ள  துறைமுகங்களுக்கு சரக்கு போக்குவரத்து செய்யப்படும்.


இந்தநிலையில், சென்னை துறை முகத்தில் இருந்து அசோக் லைலாண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்குலாரிகளை வங்கதேசத்திற்கு அனுப்பும்  திட்டம் சென்னை துறை முகத்தில் நேற்று காலை நடந்தது. மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருந்தபடி மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின்கட்கரி  வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து திட்டத்தை துவக்கி வைத்தார்.

சென்னை துறை முகத்தில் மத்திய கப்பல் போக்கு வரத்து துறையின் இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், துறைமுகம் சேர்மன் ரவீந்திரன், துணைசேர்மன் சிரில் ஜார்ஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முதல்கட்டமாக சென்னையில் இருந்து ‘‘எல்பான்ட்ஸ் இந்தியா’’ என்ற  நிறுவனத்தின் கப்பலில் 185 லாரிகள் வங்கதேசத்தின் மாங்ளா துறைமுகத்துக்கு நேற்று அனுப்பப்பட்டன.இந்தநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வீடியோ கான்பரசிங் மூலம் பேசியதாவது:இது ஒருசிறப்பான நிகழ்வு. நம் நாட்டில், கடல்வழி, சாலை வழி மற்றும் விமான வழி போக்குவரத்து நடைபெறுகிறது. சாலை வழியாக ஏற்றுமதி  செய்யும் போது, அதிக விபத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். பயண நாட்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் எரிபொருள் விரயம் ஆகும்.  

ஆனால் கடல்வழியாக கப்பல்கள் மூலம் சரக்குகள் ஏற்றுமதி செய்தால் சுற்றுச் சூழல் மாசு குறைவதுடன், விபத்துக் களையும் தடுக்கமுடியும். அதனால்தான் மத்திய அரசு கடல்வழி போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.பிரதமர் நரேந்திரமோடி கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி இன்று இந்ததிட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது ஆரம்பம்தான். இனிவரும் நாட்களில் தமிழ்நாடு  உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் வங்க தேசத்திற்கு சரக்கு வாகனங்கள் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply