வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகியமாநிலங்கள் வெள்ளம் மற்றும் நிலச் சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தபகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு நடத்த பிரதமர் நரேந்திரமோடி இன்று அஸ்ஸாம் சென்று வெள்ளம்பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

இதையடுத்து வடகிழக்கு மாநிலங்களின் ஏற்பட்ட வெள்ளநிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள் கலந்துகொண்டனர். 

இந்த ஆலோசனைக்கு பிறகு உடனடி நிவாரண தொகையாக வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 2,350 கோடி நிதியை பிரதமர் அறிவித்தார். மேலும் வெள்ளத்தால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியாகவழங்கப்படும் என்று அறிவித்தார்.

Leave a Reply