''வட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியில், காங்கிரஸ்க்கு அக்கறைஇல்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.


வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, மிசோரமில், காங்.,கை சேர்ந்த, லால்தன்ஹாவ்லா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 28ல், சட்ட சபை தேர்தல் நடக்கிறது. மிசோரமில், லுங்லி நகரில் நேற்று நடந்த, பா.ஜ.க, தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

வட கிழக்கு மாநிலங்கள் மீது, காங்.,கிற்கு அக்கறைஇல்லை. வடகிழக்கு  மாநிலங்களின் கலாசாரத்தை, காங்., தலைவர்கள் தவறாக பேசுகின்றனர். அவர்களது உடைகள், வேறு உலகத்தை சேர்ந்ததுபோல் இருப்பதாக, காங்., தலைவர்கள் கிண்டலடிக்கின்றனர்.

காங்., கட்சியின், பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர். அதனால்தான், இரண்டு அல்லது மூன்று மாநிலங்களில் மட்டுமே, காங்., ஆட்சி உள்ளது. காங்., கலாசாரத்தில் இருந்துவிடுபடுவதற்கு, மிசோரம் மாநில மக்களுக்கு, தற்போது நல்லவாய்ப்பு கிடைத்துள்ளது. மிசோரம் மக்களின் நலன், காங்.,கிற்கு முக்கியம் இல்லை. அதிகாரத்தை கைப்பற்றவே, காங்., தலைவர்கள் போராடி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
 

Tags:

Leave a Reply