பிரச்னை குறித்து விவாதிப் பதற்காக பிரதமர் மோடியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்தசந்திப்புக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ''காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடி வருத்தம்தெரிவித்தார். காஷ்மீரில், பாகிஸ்தான் வன்முறையை தூண்டிவிடுகிறது. காஷ்மீரில் நிலவும் பதற்றத்தைதணிக்க ஊடகங்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். வீதிகளில் இறங்கி போராடுபவர்களுக்கு நான் ஒரேஒரு கோரிக்கையை வைக்கிறேன். என் மீது உங்களுக்கு கோபம் இருக்கலாம். ஆனால், எனக்கு ஒரேஒரு வாய்ப்புகொடுங்கள்.

காஷ்மீர் பிரச்னையை தீர்க்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் உருவாகிவரும் வாய்ப்புக்களை பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் வீணடித்துவருவது வேதனை அளிக்கிறது. வன்முறையை தூண்டி விடுபவர்கள் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. காஷ்மீரில் அமைதியை பாகிஸ்தான் விரும்பினால், அதற்குறிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய தருணம் இதுதான். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் வந்தபோது, பேச்சு வார்த்தைக்கு அவர் விடுத்த வாய்ப்பை பாகிஸ்தான் வீணாக்கிவிட்டது. ” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply