பீகார் மாநிலம் அவுரங்காபாத் தொகுதி பாஜக. எம்.பி. சுஷில்குமார் சிங் இன்று மக்களவையில் முதியோர் பென்சன் தொடர்பான பிரச்சனையை எழுப்பினார். ஜீரோ அவரில் இதுதொடர்பாக பேசியதாவது:-

 

வயது முதுமையால் பலரது கைரேகைகள் ஆதார்தரவுகளில் உள்ள விரல் ரேகைகளுடன் ஒத்துப் போகவில்லை. இதன் காரணமாக பலலட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. முதியோர் மட்டுமின்றி மாற்றுத் திறனாளிகளும் இந்தபிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஓய்வூதியம் தவிர பிற அரசு திட்டப்பயன்களும் மறுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு என் தாயாருக்கு விரல் ரேகை மறைந்து விட்டதால் செல்போன் சிம் கார்டு கிடைக்கவில்லை. பின்னர் உறவினர் பெயரில் செல்போன் இணைப்பு பெற்றுள்ளார். இதுபோன்று பலருக்கு கண் கரு விழிகளிலும் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, மத்திய அரசு இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்து, தீர்வுகாண வேண்டும். 

 

தங்கள் சந்தாதாரர்களின் பெயர்களில் கணக்குதொடங்கி மானிய பயன்களை பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். அவரது கருத்திற்கு பிஜு ஜன தளம் எம்.பி. ததாகதா சத்பதி ஆதரவு தெரிவித்தார்.

Leave a Reply