வரி நடைமுறையை எளிமைப் படுத்துவதே அரசின்நோக்கம் எனக்கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதில் அரசு தெளிவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் விளக்கமளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: பட்ஜெட் தொடர்பாக நிபுணர்களுடன் ஆக்கப்பூர்வ விவாதம் நடந்தது. சிவில்குற்றங்களை கிரிமினல் குற்றங்களாக கருதப்படக் கூடாது.உள்கட்டமைப்பை உருவாக்க அரசு செலவுசெய்யும். உள்கட்டமைப்பில் முதலீடு செய்வோம் என தெளிவாக கூறியுள்ளோம். அதில் உறுதியாக உள்ளோம். உள்கட்டமைப்பை உருவாக்குவது, நீண்டகால மற்றும் நீண்ட காலபலன்களை கொண்டது. உள்கட்டமைப்பில் 6400 திட்டங்கள் வர உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள், தனியார் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

சில்லறை முதலீட்டாளர்கள் எல்ஐசி பங்குகள் வாங்கலாம். எல்ஐசியின் தற்போதயை வர்த்தகம் பாதிக்கபடாது. எல்ஐசியில் புதியபங்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.பட்ஜெட்டில், சேமிப்புக்கு பலவழிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சலுகைகள் இல்லாத முறையில் எளிதான நடைமுறைகள் வரிவசூல் தொடரும். வரி நடைமுறையை எளிதாக்குவதே அரசின்நோக்கம். டெபாசிட்களுக்கான காப்பீட்டை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரித்துள்ளோம். ரியல் எஸ்டேட் துறைக்கு நிம்மதியை கொடுக்கும்வகையில் அரசும் ரிசர்வ்வங்கியும் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.