இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத முதல்ரயில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸை’ பிப்ரவரி 15-ம் தேதியில் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலால் `வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று சமீபத்தில் பெயரிடப்பட்ட ரயில்பெட்டி சென்னையிலிருக்கும் ரயில் பெட்டி இணைப்புத் தொழிற் சாலையில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் தான் இந்தியாவின் அதிவேக விரைவு ரயில் ஆகும்.

“பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 15-ம் தேதி காலை 10 மணியளவில் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து இந்த ரயிலை தொடங்கி வைக்கவுள்ளார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத ரயில் விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்கப் படவுள்ளது என்பது இந்தியர்களாக நாம் பெருமைப்பட வேண்டும்” என்று ரயில்வே அமைச்சகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply