வருமான வரித்துறை ரெய்டுகளுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார். 

வரும் 8-ம் தேதி நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் தனது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க குஜராத்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க பக்கம் போய்விடக்கூடாது  என்பதால் கர்நாடகாவுக்கு அழைத்து வந்திருந்தனர்.

இந்நிலையில், குஜராத் எம்.எல்.ஏ-க்களை தனது ரிசார்ட்டில் வைத்திருந்த கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் டெல்லிவீட்டில் தொடங்கிய வருமானவரி ரெய்டு இதுவரை 60 இடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஆனந்த் குமார், "கறுப்புப் பண ஒழிப்புக்கு என மேற்கொள்ளப்படும் வருமானவரி சோதனைகளுக்கு மாநில அரசு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் கொடுக்கவேண்டும். அதனை விடுத்து கடமையை செய்யும் மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டக் கூடாது" என்று தெரிவித்துள்ளார். இன்று காலை சிவக் குமாரின் மாமனார் வீட்டிலும் உறவினர்கள் வீட்டிலும் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply