வரும் கல்வியாண்டு முதல் அனைத்துகல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேற்றப் பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்தும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம், வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 2019 கல்வியாண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply