பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வரும் 14-ந்தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லிசெல்கிறார். பிரதமர் மோடியிடம் தமிழக நலன்க ளுக்கான கோரிக்கை பட்டியலை கொடுத்த அன்றே சென்னை திரும்புகிறார்.
 
சட்ட சபை தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக ஆட்சிய மைத்துள்ளது. கடந்த 23-ந்தேதி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்
 
முதல்வராக பதவியே ற்றவர்கள் டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் முக்கியத்துறைகளின் மத்திய அமைச்சர்களை சந்திப்பதுவழக்கம். இதன்படி 6-வது முறையாக முதல்வராக பதவி யேற்றுள்ள ஜெயலலிதா வரும் 14-ந் தேதி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். பிரதமர் மோடியிடம் தமிழக நலன்கள்தொடர்பான கோரிக்கை மனுவையும் ஜெயலலிதா அளித்துவிட்டு அன்றையதினமே சென்னை திரும்புகிறார்.

Tags:

Leave a Reply