2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். 2019-ம் ஆண்டு எங்களுக்கானது. எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணி மாயை. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன், சிவசேனா சேர்ந்தேபோட்டியிடும்.

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் உண்மையான தோற்றம் வித்தியாச மானது. அந்தக்கூட்டணி நிலையாக இருக்காது. அது ‘மாயை’ கூட்டணி. கடந்த 2014-ம் ஆண்டு அனைவருக்கும் எதிராக நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியை பிடித்துள்ளோம். எதிர்க்கட்சியின் மகாகூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் மாநிலத்தலைவர்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய முடியாது.

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலம், ஒடிசா மாநிலங்களிலும் பாஜக அமோகவெற்றி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த ஆட்சி குறித்துதான் மக்களவைத் தேர்தலில்பேசப்படும். ஆனால், நாங்களோ கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின்பாதுகாப்பை உயர்த்தி, உறுதி செய்திருக்கிறோம், ஊழலைத் தோற்கடித்து இருக்கிறோம். 8 கோடி மக்களுக்கு புதிய கழிப்பிடங்கள் உருவாக்கி கொடுத்திருக்கிறோம், 2.50 கோடி மக்களுக்கு புதியவீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம்.

இந்த தேசத்துக்கு வலிமையான அரசு அமைவது அவசியம். இது பாஜகவின் விருப்பம் மட்டுமல்ல, மக்களும் அப்படித்தான் விரும்புகிறார்கள்..

நன்றி அமித்ஷா பாஜக தேசியத் தலைவர்

Leave a Reply