‘இமாச்சல பிரதேச மாநில வளங்களை சுரண்டிய வர்களை வெளியேற்ற வேண்டிய சரியானநேரம் இதுதான்’’

இமாச்சல் மாநிலத்தின் வளங்களை சுரண்டி உள்ளனர். அவர்களை வெளியேற்ற மக்களுக்கு நல்லவாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் 9-ம் தேதி அதற்கான நாள். அந்தநாளில் மாநிலத்தை சுரண்டிய வர்களை வெளியேற்றுங்கள். மாநில முதல்வர் வீரபத்ரசிங் மீது ஊழல் புகார்கள் உள்ளன. ஆனால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஊழலை துளிகூட பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதை குழந்தைகூட நம்பாது.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர். அது ஏன் என்பதை அந்தக் கட்சி சுய ஆய்வுசெய்து பார்த்துக் கொள்ள வேண்டும். இமாச்சலில் நான் கடுமையாக உழைத் திருக்கிறேன். இந்த மாநிலத்தில் உள்ள எல்லா நகரங்களும் எனக்குதெரியும். இங்குள்ள ஒவ்வொரு தெருவும் எனக்கு தெரியும்.

இந்த மாநிலத்தில் 5 பூதங்கள் உள்ளன. சுரங்க மாபியா கும்பல், வன மாபியா கும்பல், போதை மருந்து மாபியா,டென்டர் மாபியா, பணியிட மாற்ற மாபியா ஆகியவை இந்தபூதங்கள், அவற்றிலிருந்து விடுபடவேண்டும். காங்கிரஸ் கட்சி சிரிப்பு மன்றமாகி விட்டது.

முதல்வரே ஜாமீனில் தான் இருக்கிறார். அவர் மீதான புகார் என்ன? அவர் மீது ஊழல்புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மிகவும் முக்கியமான குற்றச்சாட்டுகளைச் சந்தித்துவருகிறார். இதுபோன்ற முதல்வர் தலைமையில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் காங்கிரஸ் கட்சியை நீங்கள் ஏற்றுக் கொள்ள போகிறீர்களா? குழந்தைகூட அதை ஏற்றுக் கொள்ளாது.

இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைத்தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஆளும் காங்கிரஸ் கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக.வும் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கங்கரா பகுதியில் பாஜக சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Leave a Reply