2019-ம் ஆண்டுக்குள் அனைத்து நெடுஞ் சாலைகளிலும் ரெயில்பாதை குறுக்கீடு இல்லாத சாலைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. இந்ததிட்டத்துக்கு ‘சேது பாரதம்’ என்னும் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதன்படி நாட்டின் 208 இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே சுரங்கப் பாலங்கள் கட்டுவதற்கு சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவுசெய்து இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 1,500 பாலங்களும் புதுப்பிக்கப் படுகின்றன.

இந்த திட்டத்தின் தொடக்கவிழா, டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பாலங்கள் கட்டுவதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசும் போது கூறியதாவது:-

நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு கட்டமைப்பில் நாம் துரிதமாகவும், பலத்துடனும் செயல்படவேண்டியுள்ளது. நமக்கு இருக்கும் பிரச்சினைகளை நாம் அறிவோம். எனவே அவற்றை நாம் பலப் படுத்தி மாற்றுவோம்.

நமது வளர்ச்சி தேவைப்படும் அளவிற்கு இருக்கவேண்டும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. எனவே இதற்கான வளர்ச்சிதிட்டங்கள் மெதுவாக அமையாது. இந்ததிட்டங்கள் அனைத்துமே மிகவிரைவாக நிறைவேற்றப்படும்.

சாலைகள் என்று வருகிற போது, மக்களின் வசதிகளை பற்றி சிந்தித்தாகவேண்டும். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு நம்மால் என்னென்ன உதவிகளை செய்ய முடியும் என்பதை பார்க்கவேண்டும். அந்த மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாகத்தான் ரெயில்வேதுறையில் இந்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply