வளர்ச்சி அரசியலுக்கும், நல்லநிர்வாகத்திற்கும் ஆதரவாக குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்கள் வாக்களித் துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இருமாநிலங்களிலும் பாஜக வெற்றி அடையும் நிலையில் உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னி லையில் உள்ளது.

இந்நிலையில், இருமாநில வெற்றிகுறித்து பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது

‘‘வளர்ச்சி அரசியலுக்கும், நல்லநிர்வாகத்திற்கும் ஆதரவாக குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்கள் வாக்களித் துள்ளனர். இந்த மாநிலங்களில் சிறப்புடன் பணியாற்றிய பாஜக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர்களது கடுமையான வெற்றியின் மூலம் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

பாஜக மீது குஜராத் மற்றும் இமாச்சல்பிரதேச மாநில மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அம்மாநில மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தமாநிலங்களில் தங்குதடையின்றி வளர்ச்சி ஏற்படும் வகையில் பாஜக அரசின்பணி இருக்கும்’’ எனக்கூறியுள்ளார்.

Leave a Reply