தேசிய வாக்காளர்கள் தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.

தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட நாளான இன்று (ஜன.25) தேசியவாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட இந்நாளில் அதற்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு டுவிட்டர் செய்தியில், வாக்களிக்கும் தகுதிபெற்ற அனைத்து வாக்காளர்களும், குறிப்பிடும்படியாக இளைஞர்கள், இந்திய ஜனநாயகத்தினை வலுப்படுத்த தங்களது வாக்குகளை பதிவுசெய்ய வேண்டும். வாக்கின் ஆற்றல் மிக உயர்ந்தது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply