மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திகலசங்களை பாஜக மாநில தலைவர்களிடம் பிரதமர் மோடி டெல்லியில் இன்று ஒப்படைத்தார்.

மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல்பிகாரி வாஜ்பாய் உடல் நலக் குறைவால் கடந்த 16 -ம் தேதி காலமானார். அவரது உடல்முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது. இதனையடுத்து டெல்லியிலிருந்து ஹரித்து வாருக்கு ஹெலிகாப்டர் மூலம் வாஜ்பாயின் அஸ்தி கொண்டுசெல்லப்பட்டு கங்கை நதிக்கரையில் குடும்ப உறுப்பினர்களால் அஸ்தி கரைக்கப்பட்டது.

   

அதைத் தொடர்ந்து நாடுமுழுவதும் அவரின் அஸ்தி புனித நதிக்கரைகள் கடல்களில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக பாஜக மாநில தலைவர்களிடம் வாஜ்பாயின் அஸ்திகலசம் இன்று வழங்கப்பட்டது.டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஸ்தி அடங்கிய கலசங்களை பாஜக மாநில தலைவர் களிடம் வழங்கினர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் அஸ்தி அடங்கியகலசம் வழங்கப்பட்டது.

அஸ்தி கலசம், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்படுகிறது. பொது மக்கள் அஞ்சலி செலுத்தியபிறகு, 26 -ம் தேதி கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, ஈரோடு , சென்னை ஆகிய 6 இடங்களில் அஸ்தி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப் படுகிறது.

Leave a Reply