கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நமதுவலிமையை உணா்த்தும் விதமாக, ஞாயிற்றுக் கிழமை இரவு விளக்கு ஏற்றுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமா் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் கவிதைவரிகளை நினைவுபடுத்தியுள்ளாா்.

மேடை ஒன்றிலிருந்து வாஜ்பாய் அந்த கவிதையை வாசிக்கும் விடியோவையும் மோடி தனது சுட்டுரை பக்கத்தில் பகிா்ந்து கொண்டுள்ளாா். அத்துடன், ‘வாருங்கள் ஒளியேற்றுவோம்’ என்ற வாஜ்பாயின் கவிதைவரியையும் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடி கொண்டிருக்கிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிரான நமதுவலிமையை உணா்த்தும் விதமாக, வரும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்றவேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக் கிழமை அழைப்பு விடுத்தாா்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில், ‘இந்தியா ஒளிா்கிறது’ என்ற முழக்கத்துடன் அரசின்திட்டங்கள் மக்களிடம் கொண்டு சோ்க்கபட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.