உ.பி.,மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசியில், வரும் மே 1-ம்தேதி சூரிய மின்னாற்றலில் (சோலார்) இயங்கும் படகுகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைக்க உள்ளார்.

இது குறித்து பாஜக.,வின் உத்தரப்பிரதேச (கிழக்கு) ஊடகப்பிரிவு நிர்வாகி சஞ்சய் பரத்வாஜ் கூறியதாவது:

வரும் 1-ம் தேதி கோயில் நகரமான வாரணாசிக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகை தருகிறார். அப்போது, டிஎல்டபிள்யூ மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 1,000 இ-ரிக் ஷாக்களை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.

பின்னர் அங்கிருந்து கங்கை நதிக் கரையில் உள்ள அசிகாட் பகுதிக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சூரியமின்னாற்றலில் இயங்கும் 11 படகுகளை கொடியசைத்து நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். பின்னர் படகோட்டிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

இவ்வாறு சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்தார்.

Leave a Reply