வாரணாசிக்கு இரண்டுநாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு இன்று (22-ம் தேதி) சென்றுள்ளார். நாளையும் அங்குதான் இருக்கிறார். பிரதமரின் இந்தப் பயணத்தில், உள்கட்டமைப்பு, ரயில்வே, ஜவுளி, நிதிஉள்ளடக்கல், சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரம், கால்நடை, கலாசாரம் மற்றும் ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். படா லால்பூரில் – கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு உதவும்மையமான – தீனதயாள் ஹஸ்த்காலா சன்குல்-ஐ பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சன்குல்லில் உள்ள வசதிகளை சிறிதுநேரம் பார்வையிடுவார். காணொலி காட்சி மூலம் மஹாமானா விரைவுவண்டியை நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இந்த ரயில், வாரணாசியை குஜராத்தில் உள்ள சூரத் மற்றும் வதோதராவை இணைக்கும்.

அதே இடத்தில், பிரதமர், அடிக்கல்நாட்டுவதை குறிக்கும் கல்வெட்டை திறந்துவைக்கிறார். அப்போது பல்வேறு வளர்ச்சி பணிகளை அர்ப்பணிக்கிறார். உத்கார்ஷ் வங்கியின் வங்கிச்சேவைகளை பிரதமர் தொடக்கி வைக்க உள்ளதுடன், வங்கியின் தலைமையிட கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டியதை குறிக்கும் கல்வெட்டையும் திறந்து வைக்கிறார். உத்கார்ஷ் வங்கி, குறு-நிதியளித்தலில் சிறப்புபெற்றது. மேலும், வாரணாசி மக்களின் சேவைக்காக, ஜல் அவசரகால ஊர்தி சேவையையும், ஜல் சவ வாகன சேவையையும் பிரதமர் காணொலிகாட்சி மூலம் அர்ப்பணிக்க உள்ளார். இன்று (22-ம் தேதி) மாலை, பிரதமர், வாரணாசியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க துளசிமானஸ் கோயிலுக்குச் செல்கிறார். “ராமாயணம்” குறித்த அஞ்சல் தலையை அவர் வெளியிடுகிறார்.

அதன் பின்னர், நகரில் உள்ள துர்கா மாதா கோயிலுக்கு செல்வார். செப்டம்பர் 23-ம்தேதி ஷாஹான்ஷாபூர் கிராமத்தில் சுகாதாரம்தொடர்பான நிகழ்ச்சிகளில் சிறிதுநேரம் பிரதமர் பங்கேற்கிறார். அதன் பின்னர், பசுதான் ஆரோக்கிய மேளாவுக்குச் செல்கிறார். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டப் (ஊரகம் மற்றும் நகர்ப்புற) பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கியபின், கூட்டத்தினரிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.

Leave a Reply