தமிழகத்தில் ஒருஇந்து வேற மதத்தை இப்படி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும், 24 மணிநேரம் கெடுவிதித்தார் – டாக்டர் கிருஷ்ணசாமி.

தமிழகத்தில் அரசியல் வாதிகளும் சரி இந்து மதம் அல்லாத பலர் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளையும், மத உணர்வுகளையும் கொச்சைபடுத்தி வருவது இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

சிறிது நாட்களுக்கு முன்னர் இந்துக்கள் வணங்கும் கிருஷ்ணரை பாலியல் குற்றவாளி என்று சிறிதுகூட அச்சம், வெட்கம் இல்லாமல் திராவிட கழகத்தை சேர்ந்த வீரமணி பேச அது உலகெங்கிலும் உள்ள இந்துக்கள்மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில இந்து அமைப்புகள் செருப்பு, கற்களை வீசி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். ஆனால் அத்துடன் அதனை மறந்து விட்டனர். அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றுகூறி மீண்டும் இந்துக்களையே அவமானப் படுத்தினார்.

இது இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, தொடர்ந்து நாதியற்ற சமூகம்போல் இந்துக்களை தரக்குறைவாக, இரண்டாம்தர பிள்ளைகள் போல் இந்த தமிழகத்தை சேர்ந்த 90% அமைப்புகள் நடத்தி வருகின்றன.

தற்போது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல் முஜீப் ரஹ்மான் எனும் இஸ்லாமியன் ஒருவன் இந்து கடவுள்களை கொச்சையாக மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளான்.

Fb post -MUJI RAHMAN

இதுகுறித்து போட்டோக்கள் இணையத்தில் வைரலாக அந்த இளைஞனை இது வரை சமூகநீதி பேசும் எந்த அரசியல் கட்சிகளும் கைது செய்ய வேண்டும் என்றோ அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்றோ கோரிக்கை எழுப்பவில்லை.

ஆனால் தற்போது புதியதமிழகம் கட்சியை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். ஒரு முஸ்லீம் இளைஞன் எதற்காக இந்து நம்பிக்கையினை கொச்சை படுத்த வேண்டும் வாய்கிழிய என்னிடம் கேள்வி எழுப்பிய ஊடகங்களுக்கு இது அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? இதுவே ஒரு முஸ்லிமிற்கு பள்ளிவாசலில் நடந்தால் அமைதியாக இருந்திருப்பார்களா இந்த ஊடகங்கள்.

காவல்துறை உடனடியாக இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்து தக்க தண்டனை கொடுக்கவேண்டும் இல்லை என்றால் புதிய தமிழகம் கட்சியோ அல்லது பொதுமக்களோ அவனை பிடித்தால் என்ன ஆகும் என்று சொல்லமுடியாது என்று மிகவும் ஆணித்தரமாக கூறி இருக்கிறார்.

மேலும் காவல்துறை 24 மணிநேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணசாமி அவர்களின் பேச்சிற்கு பல்வேறு தரப்பினர் இடையே ஆதரவு எழுந்துள்ளது. குறிப்பாக வார்த்தைக்கு வார்த்தை சமூக நீதி பேசுகின்ற திமுக எங்கே என்றும் ஏன் இஸ்லாமிய அமைப்புகள் இதுவரை இவனை கண்டிக்கவில்லை என்றும் பொதுமக்கள் தங்கள் ஆதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்…..

Tags:

Comments are closed.