நாடுமுழுவதும் தற்போது 475 முக்கியப் பிரமுகர்களுக்கு இஸட்பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.


விஐபி கலாசார முறையை ஒழிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்து வரும் நிலையிலும், சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படும் முக்கியப் பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், அந்த நடைமுறையை ஆய்வுக்குட்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, சம்பந்தப்பட்ட பிரமுகர்களுக்கு சமூகத்தில் இன்னமும் அச்சுறு த்தல்கள் நீடிக்கின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் அவர்களுக்கான பாதுகாப்பைதொடரலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட உள்ளது.

Leave a Reply