அறிவியல் தொடர்பான தகவல் பரிமாற்ற ங்களை பிராந்திய மொழிகளில் உருவாக்குமாறு விஞ்ஞானிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

இயற்பியலாளர் சத்தியேந்திர நாத்போஸின் 125ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, டெல்லியில் காணொலிகாட்சி மூலம் பேசிய மோடி, புதிய இந்தியாவை கட்டமைக்க தொழில் நுட்பத் துறையில் உள்ளவர்கள், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டு பிடிப்புகளில் ஈடுபட்டு, பங்களிப்பு அளிக்கவேண்டுமென வலியுறுத்தினார். 

போஸின் சாதனைகள் அவரது காலத்துடனும், சமூகத்துடனும் ஒப்பிடும்போது மிகவும் முன்னேற்றமடைந் திருந்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அறிவியல்துறையில் ஆர்வத்தை அதிகரிக்க  அத்துறை தொடர்பான தகவல் பரிமாற்றங்களை  பிராந்திய மொழிகளில் உருவாக்கு மாறு விஞ்ஞானிகளை கேட்டுக் கொண்டார்.

Leave a Reply