தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள ஐந்து மாநிலங்களிலும், பாரதிய ஜனதா வெற்றிபெறும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், 5 மாநில தேர்தல் முடிவுகளை வைத்து, மத்தியஅரசின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டாம் . இந்த 5 மாநிலங்களிலும் பாஜ.,கட்சிதான் வெற்றிபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலை சிறுத்தைகள் நடத்தும் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற் காகவே, டெல்லியில் இன்று எதிர் கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதாகவும், இதனை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஆலோசனை கூட்டமாக தாம் கருத வில்லை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply