தஞ்சைமாவட்டம், கும்பகோணத்தில் விமானத்துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜூ கூறியதாவது: விமான போக்குவரத்து துறையில்  உலகிலேயே இந்தியாதான் 20 சதவீதவளர்ச்சி அடைந்துள்ளது. சீனா 9 சதவீதமும், மற்ற நாடுகள் ஒற்றை இலக்கத்திலும் தான் வளர்ச்சி பெற்றுள்ளது. உலகளாவிய  பயணிகள்தான் விமான போக்குவரத்தை அதிகம் பயன்படுத்து கின்றனர். உள்நாட்டிற்குள் விமான பயணத்தேவை குறைவாகத்தான் உள்ளது. பிராந்திய அளவில்  விமானபோக்குவரத்தை இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது.

நாட்டில் 32 விமான நிலையங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலும், அடிப்படை வசதி குறைவாகவும் இருந்து வருகிறது. அவற்றின் தரத்தைமேம்படுத்த 10  விமான நிலையங்களை முன்னுரிமை அடிப்படையில் செய்து வருகிறோம். மத்திய அரசு புதிய 50 விமான நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளபோதிலும் அதற்கு  தேவையான இடம் குறைவாகவே உள்ளது. அந்தந்த மாநிலங்கள் இடங்களை தேர்வுசெய்து கொடுத்தால்தான் விமான நிலையங்கள் அமைக்க முடியும்.

கருப்பு பணத்தை கண்டுபிடிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நமது உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக வரி ஏய்ப்பு இல்லாமல் நேர்மையாக செலுத்தவேண்டியது  அவசியமாகும். ஜி.எஸ்.டி மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி யுள்ளதால் புதியமாற்றம் ஏற்பட்டு விலைவாசி குறைய வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.

Leave a Reply