சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் படத்தை வைக்கவேண்டும் என்று மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்த பொன்.ராதாகிருஷ்ணன், விமானநிலையத்தில் யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் படம் வைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளார். உடனே, விமான நிலைய அதிகாரிகளை அழைத்து, ‘‘பயணிகள் அனைவரும் பார்க்கும் வகையில் அண்ணாவின் படத்தை ஒரு வாரத்துக்குள் மாற்றி அமைக்க வேண்டும்’’ என அறிவுறுத்தி னார்.

ஜெயந்த் சின்ஹா

மேலும் மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் படத்தை பயணிகளும், பொதுcமக்களும் பார்க்கும் வகையிலான ஒரு இடத்தில் மாற்றி வைக்கவேண்டும்’’ என கேட்டுக்கொண்டார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜெயந்த் சின்ஹா உறுதி அளித்ததாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply