மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா செவ்வாய் கிழமை நடத்திய பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணிக்கும், பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் அணியினர் அமித்ஷாவுக்கு கறுப்புக்கொடி காட்டினர். மேலும், அவர் சென்ற வாகனத்தின் மீது இந்த மாணவர்கள் கற்களை கற்களை எறிந்தனர், இதற்கு வழிவகுத்தார் போல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இருந்ததே இதற்கு காரணம்.

திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் அணியினருக்கும், அமித் ஷாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டதால், மாறிமாறி கற்களையும், பாட்டில்களையும் எறியத் தொடங்கியுள்ளனர். சிலபகுதியில் தீயும் எரியத் தொடங்கியுள்ளது.

இதனால், காவல் துறையினர் தடியடி நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் காயமடைந் துள்ளனர்.

பாஜக தலைவர் அமித்ஷா பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழுத்தங்களை சந்தித்து வருகிறார். தோற்றுபோவது உறுதி என்று அவருக்குதெரியும். அந்த விரக்தியின் அறிகுறிதான் இது” என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Comments are closed.