விராத்கோலி அனுஷ்கா சர்மாவின் திருமணவரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி அவர்களை வாழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராத்கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சிலதினங்களுக்கு முன் இத்தாலியில் உள்ள ஆடம்பர மாளிகையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து தேனிலவுக்கு சென்ற இருவரும் தற்போது இந்தியாதிரும்பியுள்ளனர்.

டெல்லியில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை விராத்கோலியும் அனுஷ்காவும் நேற்று அவரது அலுவலகத்தில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தனர்.

அவர்களின் அழைப்பையேற்று பிரதமர் மோடி இன்று நடைபெற்ற அவர்களின் திருமணவரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர்களுக்கு வாழ்த்துதெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வரும் 26ஆம் தேதி மும்பையிலும் இவர்களின் திருமணவரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply