தேசிய இளைஞர் திருவிழா, சுவாமி விவேகா னந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு இளைஞர் திரு விழா, 5 நாட்கள் கொண்டமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த இளைஞர் திரு விழாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்த கருத்துக்களை இளைய தலை முறையினர்களிடமிருந்து பெறும் பொருட்டு மொபைல் அப்ளிகேசன் உருவாக்கபட்டுள்ளது. இந்த அப்ளிகேசனின் உதவியுடன்,இளைஞர்கள் தலைமையில் வளர்ச்சி, திறன்மேம்பாடு, கல்வி, புதுமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறி்த்தும் அதில் தமதுபங்களிப்பு குறித்தும் விரிவான கருத்துக்களை அளிக்க இளைஞர்களை வரவேற்பதாக, பிரதமர் நரேந்திரமோடி, தனது டுவீட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:

Leave a Reply