நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக கூறி எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களது விருதுகளை திருப்பி அளித்துவருகின்றனர். சகிப்புத்தன்மை யின்மைக்கு எதிராக விஞ்ஞானிகளும் குரல்கொடுத்து வருகின்றனர். மூத்தவிஞ்ஞானி பி.எம்.பார்கவா, தனது பத்மபூஷன் விருதினை திருப்பி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இவ்வாறு விருதுகளை திருப்பி கொடுப்பது குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெட்லி, விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் பா.ஜனதாவை தீவிரமாக எதிர்ப்பவர்கள் , அவர்களில்  சிலர் கடந்த பொதுத் தேர்தலின்போது வாரணாசியில் மோடிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு சென்றவர்கள்.

இடதுசாரிகளின் செல்வாக்கு குறைந்துள்ளது , விருதுகளை திருப்பி கொடுப்பது, பீகார் தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிரான பிரசாரபாதை . நாட்டில் சகிப்புத் தன்மையின்மை சூழ்நிலை நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டையும் ஜெட்லி மறுத்தார்.

Leave a Reply