சென்னையில், பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயார்நிலையில் உள்ளது. மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசுக்கு மக்கள் மிகுந்தசெல்வாக்கு உள்ளது. அந்தசெல்வாக்கு தமிழகத்தில் எதிரொலிக்கும். இதனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றிபெறும்.
 
பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு, விருப்ப மனு மார்ச்  4 ஆம் தேதி மற்றும் 5 ம் தேதி ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது. மார்ச்13 மற்றும் 14 தேதிகளில் வேட்பாளர் நேர் காணல் நடைபெறும்.
 
மார்ச்மாதம் தமிழகத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகிறார். மார்ச் முதல்தேதி கமலாலயத்தில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்புவிழா நடைபெறும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலகம் திறக்கப்படும் என்றார். 

Leave a Reply