இந்தியா 60 சதவிகிதம் காவி மயமாகி விட்டது, விரைவில் தமிழகமும் காவி மயமாகும் என பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் பாஜக ஆட்சியின் மூன்றாண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இந்தவிழாவில் கலந்து கொண்டனர். இதனிடையே பொது கூட்டத்தில் பேசிய தமிழிசை, 'தமிழகத்தில் பா.ஜ.க புறவாசல் வழியாக வரவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. விரைவில் பெரியளவில் பா.ஜ.க காலூன்றும்' என கூறியுள்ளார்.

'இந்தியா 60 சதவிகிதம் காவி மயமாகி விட்டது. விரைவில் தமிழகமும் காவி மயமாகும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply