வரும் ஓராண்டுக்குள் நாடுமுழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கபடும். நாட்டின் முன்னேற்றமே மத்திய அரசின் நோக்கம் . குறிப்பாக டிஜிட்டல்மயம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். தற்போது டிஜிட்டல் பணபரிமாற்றம் பலமடங்காக அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் நாட்டில் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும். இதற்கான பணிகள் துவங்கி விட்டது. இன்னும் ஓராண்டுக்குள் டிஜிட்டல் கிராமங்கள் முழுஅளவில் நிறைவேறும்.

தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவசெய்ய பெரும் முயற்சி செய்கிறது. இது அவ்வப்போது நமது வீரர்களால் தடுக்கப்பட்டு வருகிறது. இந்தியபடை நடவடிக்கையால் பாகிஸ்தான், இந்திய தூதரை வெளியேற்றியதுடன் , ரயில் சேவைகளை துண்டித்தது. தற்போது இந்தியாவில் இருந்த செல்லும் தபால் சேவைகளையும் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திவிட்டது. 2 மாதங்களாக இந்த சேவை பாதிக்கப் பட்டுள்ளது. இது உலக போஸ்டல் நியதிப்படி முற்றிலும் தவறானது.

என தகவல் தொடர்புதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

Comments are closed.