விளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு செய்தது மகிழ்ச்சியாக இருப்பதாக பிரதமர் மோடிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நன்றி கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் சில்வர்பட்டம் பெற்ற, தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கு நன்றிகூறி பதிவிட்டுள்ளார்.

அதில், இந்திய விளையாட்டுத் துறையின் கோரிக்கைகளை ஏற்று விளையாட்டு உபகரணங்களுக்கு ஐஜிஎஸ்டி வரியை விலக்கு அளித்தற்கு பிரதமர் மோடி, ஜிஎஸ்டி கவுன்சில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply