விவசாயக் கடனுக்கான வட்டி மானியத்தை மே 31-ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தேசிய ஊரடங்கால் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளனா். அவா்களுக்கு உதவும்வகையில் இந்த வட்டிமானிய சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) பிற வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், குறுகியகால விவசாயக் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு மே 31-ஆம் தேதிவரை வட்டி மானியம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி வட்டியில் 2 சதவீதமும், குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது 3 சதவீதமும் சலுகை கிடைக்கும்.

இப்போதைய ஊரடங்கு சூழலில் விவசாயிகள், வங்கிக்கு சென்று கடனை திருப்பச்செலுத்த முடியாத நிலை இருக்கும். எனவே, மே 31-ஆம் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்படுகிறது. கடந்த மாா்ச் 1 முதல் மே 31-ம் தேதிவரையிலான காலகட்டத்தில் ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு இந்தசலுகை கிடைக்கும்.

குறுகிய விவசாய கடனாக ரூ.3 லட்சம் வரை பெறும்போது 7 சதவீதம் வட்டியாகும். இதில் வட்டிமானியம் 2 சதவீதம் அளிக்கப்படுகிறது. குறித்தகாலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் மொத்தமாக 3 சதவீதம் வட்டிமானியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.