இந்திய தொழில்வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) 93வது ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்திர  மாநாட்டு துவக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கடந்த 6 ஆண்டுகளில் உலகம் இந்தியாமீது வைத்திருந்த நம்பிக்கையானது, கடந்த சிலமாதங்களில் மேலும் வலுப்பெற்றிருகிறது. அது அந்நிய நேரடிமுதலீடாக இருந்தாலும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களாக இருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகளவில் முதலீடுகளை செய்து சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து முதலீடுசெய்கின்றனர்.

கடந்த கால கொள்கைகள், பலதுறைகளில் திறமையின்மையை ஊக்குவித்தன, புதிய சோதனைகளை நிறுத்தின. சுயசார்பு இந்தியாதிட்டம், ஒவ்வொரு துறையிலும் செயல்திறனை ஊக்குவிக்கிறது. நீண்டகால போட்டித்தன்மையில் சாதகமான துறைகளில் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வேளாண் உள்கட்டமைப்பு, உணவுபதப்படுத்துதல், சேமிப்பு அல்லது குளிர்பதன கிடங்கு என விவசாயத் துறைக்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிறதுறைகளுக்கும் இடையில் உள்ள தடுப்பு சுவர்களை கண்டோம். அனைத்து சுவர்களும் தடைகளும் இப்போது அகற்றப்பட்டுள்ளன.

விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதியவேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கூடுதல் சந்தை வசதிளை பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்களுக்கு பிறகு, விவசாயிகளுக்கு புதியசந்தைகள், விருப்பத் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் அதிக நன்மைகிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.