ஹைட்ரோ கார்பன் திட்டம்குறித்து வரும் 20ஆம் தேதி பாஜக சார்பில் தமிழகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

இலங்கைவாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் இன்று பல்வேறு கோரிக்கைகளுடன் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது என்றார்.

மேலும் பேசியவர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

Comments are closed.