டெல்லியில் கடந்த 2 வாரங்களாக வேளாண்சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பின்னணியில் காங்கிரஸ்கட்சி உள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய பாஜக அரசு புதிய 3 வேளாண்சட்டங்களை கொண்டுவந்தது. இடைதரர்கள் இன்றி அனைத்து பொருட்களையும் விவசாயிகளே விற்பனை செய்யலாம். அதன்மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் விவசாயிகளுக்கே செல்லும்வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், விவசாயிகள் ஏஜெண்ட்கள் பலர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால், விவசாயிகளிடம் பொய்யான தகவல்களை சொல்லி போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளதாகவும், அதுதெரியாமல் விவசாயிகளும் அப்பாவியாக போராட்டத்தி்ல ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்காக பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளதாம்.

மேலும், பஞ்சாப்பில் அதிகளவு கோதுமையில், பலஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழந்ததால், காங்கிரஸ் ஏஜெண்ட்டுகள் ஆவேசம் அடைந்து, விவசாயிகளை தூண்டிவிட்டு வருவதாகவும், இதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக மெத்தை, தலையணை உள்ளிட்ட வசதிகளை ஏஜெண்ட்டுகள் செய்து கொடுத்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனையடுத்து, வேளாண்சட்டம் மூலம் உள்ள நன்மைகளை நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில், பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Comments are closed.