விவசாய வருமானத்தை அதிகரிக்கும்நோக்கில் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுத்து, திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன,'' என பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

டில்லியில் '2022க்குள் விவசாய வருமானம் இருமடங்கு' என்ற தலைப்பில்,கருத்தரங்கு நடந்தது. இதில், பிரதமர்மோடி பங்கேற்று பேசியதாவது:

நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும் அரசு கடமைப்பட்டுள்ளது.

அதனால் தான் 2018 – 19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், விவசாய நலன்களை பாதுகாக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு எளிதான கடனுதவி திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் வருமானம் அதிகரிக்கும்.

நாட்டில் கடந்த ஒருஆண்டில் மட்டும், பருப்புவகைகள் உற்பத்தி 1.7 கோடி டன்னிலிருந்து 2.3 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.உற்பத்தி செலவை குறைத்து, தரத்தை உயர்த்தி, சந்தைக்கு விவசாயபொருட்களை எளிதாக எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

மண்வளம் குறித்தும், அதில் எந்த பயிர் சிறப்பாக வளரும் என்பதுபற்றியும், விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால்,உற்பத்தி அதிகரித்துள்ளது. ரசாயன உரங்களின் பயன்பாடு, 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த, 99 நீர்பாசன திட்டங்ளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும்.சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவித்தல், விவசாய கழிவுகளை வருமானமாக மாற்றுவது போன்ற திட்டங்களால், விவசாயிகளின் வருமானம், 2022க்குள், இரு மடங்காகி விடும்.


கரும்பிலிருந்து கிடைக்கும் எத்தனாலை, பெட்ரோலில்10௦ சதவீதம் கலக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply