விவசாயிகளின் வருவாயை இரண்டுமடங்காக அதிகரிக்கச் செய்யவே விவசாய துறைக்கு இம்முறை ரூ.2.12 லட்சம் கோடியாக பட்ஜெட் இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி இன்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடன் இன்று வீடியோ கான்பரன்ஸிங் மூலம் கலந்துரை யாடினார். இதில் பேசிய பிரதமர் மோடி,”மத்திய அரசு, விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க செய்ய உள்ளீட்டுசெலவு குறைப்பு, பயிர்களுக்கு நியாயமான விலை நிர்ணயிப்பது, அழுகும் நிலையில் இருந்து பயிர்களைபாதுகாத்தல் மற்றும் வருவாய்க்கு மாற்று வழிகளை உருவாக்குதல் ஆகிய 4 வழிகளை முக்கியமான விதிகளாக கொண்டுள்ளது” என்று கூறினார்.

“வேளாண் துறைக்க்கு ரூ.2.12 லட்சம்கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட அளவை விட 2 மடங்கு அதிகமாகும்” என்று பெருமைப்பட தெரிவித்தார்.

”2022 ஆம் ஆண்டிற்குள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நமது விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்தப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். விவசாயிகளுக்கு தேவைப்படும் இடங்களில் எங்கள் உதவியை நல்குவோம். இந்திய விவசாயிகளின் மீது எங்களுக்கு முழுநம்பிக்கை உள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும்,”உணவு தானியங்களில் மட்டும் இந்தியா அதிகஉற்பத்தியை சந்திக்கவில்லை. பால், பழங்கள், காய்கறிகள் என அனைத்தும் அதிகளவில் உற்பத்தி செய்யப் படுகின்றன. கடந்த 2017-2018 நிதியாண்டில், 28 கோடி டன்கள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப் பட்டன. 2010-2014 காலகட்டத்திற்குள் 25 கோடி டன்கள் தாணியங்கள் மட்டுமே உற்பத்தியாகின. பருப்புவகைகளின் உற்பத்தி 10.5 சதவீத அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Reply