இந்திய விவசாயிகளை தவறானபாதையில் நடத்திச்செல்ல சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் விவசாய விளைபொருள் விற்பனைசெய்யும் மண்டிகளில் உள்ள தரகர்களின் ஆதரவாளர்கள். விவசாயிகள் அவர்களை நம்பக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பீகார் மாநிலத்தில் ரூபாய் 2500 கோடி மதிப்புள்ள 13 ரயில்வே திட்டங்களை  காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்து பேசினார்.

அவர் தனது துவக்க உரையில் விவசாயிகளுக்காக மத்திய அரசு தாக்கல்செய்துள்ள மூன்று மசோதாக்கள் குறித்து குறிப்பிட்டு பேசினார்.

மத்திய அரசு தாக்கல்செய்துள்ள மூன்று விவசாயம் தொடர்பான மசோதாக்கள் விஷயத்தில் இந்திய விவசாயிகளை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிசெய்து வருகிறார்கள்.

தவறான தகவல்கள் இன்று நாட்டில் சிலரால் பரப்பப்படுகின்றன. அவர்கள் விவசாய விளைபொருள்களுக்கு  நியாயமானவிலை விவசாயிகளுக்கு கிடைக்காது என்று கூறுகிறார்கள்.ஆனால் பாஜக அரசு விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலையில் பெற்றுத்தருவதற்கு உறுதி பூண்டுள்ளது.

இனி இந்திய விவசாயிகள் தங்களுடைய உற்பத்திபொருள்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எந்ததடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் விற்பனை செய்யலாம்.

மத்திய அரசு தாக்கல்செய்துள்ள புதிய மசோதாக்கள் விவசாயிகளுக்கு இடைத்தரகர்களிடம் இருந்து சுதந்திரம் வழங்குகிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இனிமேல் கிடைக்கும்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்து நிறைவேற்றியுள்ள மசோதாக்கள் விவசாயிகள் பாதுகாப்பு கவசமாக செயல்படும்.ஆனால் பலர் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாக்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பிவருகிறார்கள் . அவர்கள் போராட்டத்துக்காகவே போராட்டம் நடத்தி வருகிறார்கள் .

இந்தியாவின் விவசாயிகள் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்திய விவசாயிகளுக்கு யார்தரகர்கள் என்பது நன்றாக தெரியும்.

அவர்கள் வானளாவிய சாதனைகள் என்று  குறைந்தபட்ச ஆதரவு விலைபற்றி பட்டியல் இடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு போதும் அந்த சாதனைகளை நிறைவேற்றியது இல்லை. விவசாயிகள் நலனுக்காக அவர்கள் பாடுபட்டதும் இல்லை. ஆனால் தேசியஜனநாயக கூட்டணி அரசு அவர்களுக்காக  செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் அகற்றுவதற்காக தேசிய ஜனநாயக முன்னணி அரசு பாடுபட்டுவருகிறது .பிரதம மந்திரியின் விவசாயிகள் உதவிதிட்டத்தின் மூலம் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ. 1 இலட்சம் கோடி நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நான் ஒன்றை குறிப்பிடவிரும்புகிறேன். விவசாயிகள் அவர்கள் சொல்வதை நம்பக்கூடாது.சிலர் விவசாயிகளிடத்தில் பொய்சொல்கிறார்கள். அவர்கள் விவசாய மண்டிகளில் உள்ள தரகர்களின் ஆதரவாளர்கள்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாக்கள் விவசாய சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது. அவை விவசாயிகள் தங்கள்லாபத்தை பெருக்கிக் கொள்வதற்கு புதிய வழிகளைத் திறந்து விடுகின்றன. இந்த சீர்திருத்தங்கள் காரணமாக விவசாயத்திற்கு  நவீனதொழில்நுட்பம் வந்து சேரும். நம்முடைய விவசாயிகள் கூடுதல் அதிகாரம் உடையவர்களாக பயன்பெறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

Comments are closed.