"அது மட்டும் ஒருபோதும் நடக்காது. எங்கள் உயிரைக் கொடுப்போமே தவிர மதம் மாற மாட்டோம் "
வீரச் சிறுவர்களின் அமரகாவியம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு
ஜொராவர்சிங் (வயது 9),
பதேஹ்சிங் ( வயது 7)
சீக்கியர்களின் பத்தாவது குரு குருகோவிந்தசிம்மனின புதல்வர்கள்.
1704ஆம் ஆண்டு டிசம்பர் ஸரஹிந்த் நவாப் படைகளால் சிறைபிடிக்கப் பட்டனர். மூன்று நாட்கள் சிறுவர்களை மதம்மாற்றிட பல்வேறு வழிகளில் முயற்சி நடந்தது.
வீரச்சிறுவர்கள் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக இருந்தனர்.
நான்காவது நாள், அதாவது 1704, டிசம்பர் 26.
இரு வீரச்சிறுவர்களையும் உயிரோடு சுவர் எழுப்பி கொல்ல தீர்ப்பானது.
இரு வீரச்சிறுவர்களையும் சுற்றி செங்கல்லை கொண்டு சுவர் எழுப்பப்பட்டன.
ஒவ்வொரு செங்கல்லை வைக்கும் போதும் 'மதம் மாற தயாரா'? என கேள்வி எழுப்பப்பட்டது.
"அது மட்டும் ஒருபோதும் நடக்காது. எங்கள் உயிரைக் கொடுப்போமே தவிர மதம் மாற மாட்டோம் " வீரச் சிறுவர்கள் முழக்கம் இட்டனர்.
சிறியவன் பதேஹ்சிங் கழுத்து உயரம் வரை செங்கல் எழுப்பப்பட்டது.
பெரியவன் ஜொராவர்சிங் கண்ணில் கண்ணீர்.
சிறியவன் கேட்கிறான் ' அண்ணா, பயந்து விட்டாயா. ஏன் அழுகிறாய்'.
பெரியவன் ஜொராவர்சிங் கூறுகிறான், 'நீ என்னை விட சிறியவன். ஆனால் உனக்கு தர்மத்திற்காக உயிர் விடும் வாய்ப்பு முதலில் கிடைக்கிறது. பெரியவனான எனக்கு கிடைக்கவில்லை என்று எண்ணி மனதில் கஷ்டமாக இருக்கிறது '
வீரச்சிறுவர்களின் வீர மரணம் பற்றி அறிந்த சேட்ஜி தோடர்மால் என்பவர் அந்த இடம் அளவுக்கு பொற்காசுகளை நவாப் இடம் கொடுத்து அந்த புண்ணிய பூமியை வாங்கி, வீரச்சிறுவர்களை வேத முறைப்படி தகனம் செய்தார்.