ஜம்மு- காஷ்மீரில், ஐந்துவீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹந்த்வாராவில் ஊடுருவிய பயங்கர வாதிகளுக்கும் – ராணுவ படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேல் நடந்த இந்த துப்பாக்கிச்சண்டையில், ராணுவத் தளபதி உள்ளிட்ட நான்குவீரர்கள் மற்றும் காஷ்மீர் உதவி ஆய்வாளர் ஒருவர் வீரமரணம் அடைந்தனர்.

மேலும் இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லபட்டனர். இந்நிலையில் பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கலில், உயிர் நீத்த வீரர்களின் தியாகமும், வீரமும் மறக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டை காப்பாற்றுவதற்காக ஓய்வின்றி போராடிய வீரர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.