விவசாயக் குடும்பத்தைச்சேர்ந்த வெங்கய்யா நாயுடு இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பிறந்த முதல் குடியரசுத் துணைத்தலைவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து, இன்று வெங்கய்யா நாயுடுவின் பதவி ஏற்புநிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்குத்தொடங்கிய இவ்விழாவில் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கய்யா பதவியேற்றுள்ளார்.

இந்தவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோருடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழா நிறைவுற்றதும் மாநிலங்களவை கூட்டத்தில் பேசிய பிரதமர் , சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல்குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயடு ஆவார். நீண்டகால அரசியல் பயணத்திற்குப் பிறகு இப்பதவிக்கு வந்திருக்கும் முதல் குடியரசுத் துணைத்தலைவராகவும் இருக்கிறார். இதே நாடாளுமன்ற வளாகத்தில் பல ஆண்டுகளாக அவர்செலவிட்டார். வெங்கய்யா நாயுடு அவர்களின் தலைமையில் மாநிலங்களவை மிகவும் சிறப்பாக செயல்படும் .

 “விவசாயத்தைக் குடும்பத்தைச்சேர்ந்தவர் வெங்கய்யா நாயுடு. ஒரு விவசாயிக்குத்தான் விவசாயத்தில் உள்ள சவால்கள் தெரியும்” என்று புதிய துணை ஜனாதிபதியை பிரதமர் புகழ்ந்து தள்ளினார்.

Leave a Reply