வென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்காக பாடுபடும் கட்சி என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலமாக கட்சி தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது-

சில கட்சிகள் தேர்தலுக்காக மட்டுமே செயல்படும். பாஜக அப்படியல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டதுதான் பாஜக. மக்களுக்காக, சமூகத்திற்காக, நாட்டின் மாற்றத்திற்காக பாஜக செயல்பட்டு வருகிறது.

மக்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது என்பது கடவுளிடம் ஆசிர்வாதம் வாங்குவதை போன்றதாகும். மக்கள்சக்தி மிக்கவர்கள். அவர்கள் எப்போதும் நம்மிடம் வலியுறுத்தவும் செய்வார்கள். கோரிக்கையும் வைப்பார்கள்.

பொது முடக்கத்தின் போது பாஜக தொண்டர்கள் ஏராளமான மக்களுக்கு உதவி செய்துள்ளனர்.ஏழைகளை தங்களது குடும்ப உறுப்பினரை போன்று நமதுகட்சி தொண்டர்கள் அணுகியுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தானில் பாஜக தொண்டர்கள் மிகசிறப்பாக பணியாற்றியுள்ளனர். பீகார் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த தொண்டர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மோடியுடன் வீடியோ கான்பரன்சிங்கில் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன்,பியூஷ் கோயல், கிரிராஜ் சிங், கட்சியின் தேசியதலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.