மாண்புமிகு மத்தியநிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துச் செய்தி. மனித சமுதாயத்திற்கு அடிப்படை தேவைகளாக இருக்கின்ற வீரம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் அள்ளி வழங்குகின்ற மா பெரும் சக்திகளான துர்கா, சரஸ்வதி, லஷ்மி ஆகியோருக்கு நமது நன்றியையும், வணக்கத்தையும், வேண்டுதலையும் தெரிவிக்கும் விழாவாக 9 தினங்கள் நவராத்திரி நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்விழாவை குடும்ப விழாவாக கொண்டாடி வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு இனிய 10ஆம் நாள் விஜய தசமி திருநாளான வெற்றித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது பாரதநாட்டின் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் பொறுபெற்றப் பின்பு 5 ஆம் ஆண்டாக இவ்விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் தேச பாதுகாப்பை அச்சுறுத்தும் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கு துல்லிய தாக்குதல், சீனாவை எதிர்கொள்ள டோக்லான் நடவடிக்கை போன்றவற்றாலும், நமது ராணுவ பலத்தை அதிகரிக்க ரபேல் போர்விமான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலமாகவும் நமது நாட்டின் பலத்தை உலக நாடுகள் உணரும்படி பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் பலமடங்கு உயர்த்திக் காட்டியிருக்கிறார்.

மருத்துவக் கல்வி, திறன் வளர்ப்பு பயிற்சி, விளையாட்டுக்கான முதல் பல்கலைகழகம் என பல தொழில்நுட்ப கல்லூரிகளை உருவாக்கி கல்வி புரட்சியையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உருவாக்கிகாட்டி இருக்கிறார். டிஜிட்டல் இந்தியா, மேக்கின் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா போன்ற பல திட்டங்கள் மூலம் தொழில்புரட்சியையும் ஏற்படுத்தி உள்ளார் நமது பிரதமர் அவர்கள். ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதார சீர்திருத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து பொருளாதார மறுமலர்ச்சியை மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக நடத்திக் காட்டி இருக்கிறார் திரு. நரேந்திர மோடி அவர்கள்.

இப்படி மூன்று மாபெரும் இறை சக்திகளின் அருளுக்கு பாத்திரமானதாக இந்திய திருநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அரசாங்கம் உருவாக்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை நம் நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் நாம் அடைந்துள்ள இந்த வளர்ச்சியை மேலும் வளர்ச்சி அடைய செய்து உச்சத்திற்கு கொண்டு சென்று உலகின் முதல்நிலை நாடாக நமது இந்திய நாட்டை உருவாக்க அன்னையின் அருள் கிடைக்க பிரார்த்தித்து மீண்டும் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். –

பொன். இராதாகிருஷ்ணன்

Leave a Reply