உலக அடையாளமாக மாறியுள்ள 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் இந்தியா மட்டுமன்றி உலகநாடுகளும் பொருட்களை தயாரிக்கின்றன என பிரதமர் மோடி பேசினார்.

இந்தியா – ஜப்பான் இடையிலான, 13வது ஆண்டு மாநாடு, இரண்டு நாட்கள் நடக்கவுள்ளது. இதில்பங்கேற்க, பிரதமர் மோடி, ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோ நகரில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: தீபாவளி வெளிச்சம்போல் இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமைசேர்த்து வருகிறார்கள்.
 

இந்துக்களோ, புத்த மதத்தை சேர்ந்தவர்களோ நமது மூலம் ஒன்றுதான். இந்துக் கடவுகள்களை ஜப்பானியர்கள் வணங்குகின்றனர். சேவை என்ற சொல் ஜப்பானிலும், இந்தியாவிலும் ஒன்றுதான். 

உலக அடையாளமாக மேக் இன் இந்தியா மாறியுள்ளது. சர்வதேச மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகநாடுகளும் மேக் இன் இந்தியா மூலம் பொருட்களை தயாரிக்கின்றன.

டிஜிட்டல் கட்டமைப்மைப்பில் மிகப் பெரிய மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறது. பிராட் பேண்ட் கிராமங்களையும் சென்றடைந்துள்ளது. இந்தியாவில் சிறிய குளிர்பானத்தின் விலையைவிட 1ஜிபி டேட்டாவின் விலை குறைவு. இந்தியாவில் 100 கோடி மக்கள் மொபைல் பயன் படுத்துகின்றனர். மொபைல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

One response to “வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமைசேர்கிறார்கள்”

Leave a Reply