மத்தியில் உள்ள பாஜக  அரசை சீர்குலைக்க சதி நடக்கிறது . சமீப காலமாக என் மீது தொடர்தாக்குதல்கள் நடத்தப்படுவதை நீங்கள் காணலாம். சிலர் தொடர்ந்து தாக்கு தல்களில் ஈடுபட்டு வருகின்றனர். டீவிற்றவர் எப்படி பிரதமர் ஆனார் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடிய வில்லை .

நான் எடுத்த சில நடவடிக் கைகளால் இவர்கள் எல்லோரும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பணம்வருகிறது. எனது அரசு அதற்கு கணக்கு கேட்கிறது. நிதிவரட்டும். ஆனால் பெற்ற நிதிக்கு கணக்கு சொல்லுங்கள் என்கிறோம். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக் கிறார்கள். எனக்கு எதிராக அவர்கள் கோஷம்போடுகிறார்கள்.

மோடியை எப்படி முடிக்கலாம், மோடியின் அரசை எப்படி அகற்றலாம், மோடி புகழை எப்படி சீர்குலைக்கலாம் என எப்போதும் சதி செய்துவருகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து பெறப்படுகிற நிதி எப்படி செலவிடப் படுகிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டுக்குண்டு. இது சட்டத்தில் உள்ளது.

என் அருமை சகோதரர்களே, சகோதரிகளே, இந்த பிணியில் (ஊழல்) இருந்து நாட்டை விடுவிக்கத்தான் என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் எனக்கு எதிராக என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டு போகட்டும். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பில் இருந்து நான் விலகிச் செல்லப்போவதில்லை. நான் அதை நிறுத்த மாட்டேன். நான் தளர்ந்துபோகவும் மாட்டேன். அதற்கெல்லாம் அடிபணியும் கேள்விக்கே இடமில்லை.

எனக்கு எதிராக தூற்று கிறவர்களுக்கு எது உறுத்துகிறது, எது பாதிப்பை ஏற்படுத் துகிறது என்பதை நான் அறிவேன். ஆனால், நாட்டை கொள்ளையடிப்பதை, அழிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா மாநிலம், பர்காரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது:

Leave a Reply