பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் வெளி நாடுகளில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தபேட்டியில் கூறியுள்ளார்.
 
உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரைநட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில்வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படியெல்லாம்  ஏய்ப்பு செய்துள் ளார்கள் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதுதான் "பனாமா பேப்பர்ஸ்".
 
தற்போது இந்தவிவகாரம் இந்தியாவில் அடுத்த சர்ச்சையாகக் கிளம்பியுள்ளது. இதில் இந்தியர்கள் 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தவிவகாரம் குறித்து பேசிய ஜேட்லி, இந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியுள்ளது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்.
 
அதுவரை அவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக பனாமா பேப்பரை முன் வைத்து வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பிரபலங்கள் பணம் பதுக்கியுள்ளனர் என்பது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தவிவகாரம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாகவும் ஜேட்லி கூறினார். குற்றம் சாட்டப்பட் டுள்ளவர்களில் சட்ட ரீதியான கணக்குகள் எது, சட்டத்துக்குப் புறம்பான கணக்குகள் எது என விசாரணை நடத்தப்படும். சட்டவிரோதமாக பணத்தை பதுக்கி உள்ளனர் என்று தெரிந்தால் முழுவதுமாக அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தவிவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்தும் சரிசெய்யப்படும் என்றார்.

Leave a Reply