முறையாக வேலைசெய்யாத, புகார்களை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் மீது பணிநீக்கம், பென்ஷன் நிறுத்தம் உள்ளிட்ட கடுமையான  நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு செயலாளர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடனான மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது அரசு நடவடிக்கைகள், மக்களின் குறை கேட்பு, இணையவழியிலான தொடர்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பணிசெய்யாத அரசு அதிகாரிகள், தொடர்ந்து வரும் புகார்களை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணிநீக்கம், பென்ஷன் நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சுரங்க மற்றும் கலால் துறையில் பணிசெய்யாத அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply